சிறு குறு தொழில்முனைவர்களாக இந்தியாவின் எந்த மூலையிலும் தொழில் தொடங்க ஆசைப்படுகின்றவர்களுக்கும் மற்றும் தொழில் தொடங்கி ஏற்கனவே நடத்தி வருகின்றவர்களுக்கும் பயன்படுகின்ற வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பநிலையிலேயே சிக்கல்களை சந்திக்கும் குறு சிறு மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், அடுத்து அடுத்து என்ன என்ன செய்வது என்று படிப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக அறிவியல் முறையில் வகைப்படுத்தி வரிசைப்படுத்தி தங்களைத் தாங்களே சோதித்து கொள்ளும்படி இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் திட்டங்கள், கடன், மானியங்கள் மற்றும் தொழிலுக்கு உதவும் அமைப்புகள் அவற்றின் இணைய முகவரிகள் என ஒரு தொழில்முனைவர் அறிந்திருக்க வேண்டிய அனைத்தையும் விட்டுவிடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது.